Samantha Reply to Fan About Divorce

உங்கள் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து விடுங்கள் என ரசிகர் ஒருவர் கூறியதற்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.

Samantha Reply to Fan About Divorce : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. விஜய் சூர்யா தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தமிழ் நடிகர் சித்தார்த்தை காதலித்து பின்னர் பிரேக்கப் செய்து கொண்ட இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சில படங்களில் கவர்ச்சியாகவும் நடிக்கிறார்.

இந்த நிலையில் இவர் ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர் ஒருவர் உங்களின் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து விடுங்கள் எனக் கூறினார்.

அதற்கு சமந்தா என்னால் முடியாது நீங்கள் வேண்டுமானால் நாக சைதன்யாவுடன் கேளுங்கள் என பதிலளித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.