Samantha

Samantha Movie : 20 வருடங்களுக்கு பிறகு சமந்தாவின் படத்தில் ரி-என்ட்ரி கொடுத்துள்ளார் பழம் பெரும் நடிகை ஒருவர். இந்த படத்தில் படப்பிடிப்புகளில் இருந்து சில புகைப்படங்களும் லீக்காகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது ஓ பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்டைலில் அப்பாவை மிஞ்சிய குட்டி தல – வைரலாகும் ஆத்விக்கின் புகைப்படங்கள்.!

கொரிய மொழியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த மிஸ் கிராணி படத்தின் ரீமேக்கான இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்கி வருகிறார்.

தற்போது இந்த படத்தில் சமந்தாவுடன் சேர்ந்து நடிக்க பிரபல நடிகையான லக்ஷ்மியும் இணைந்துள்ளார். 20 வருடங்களுக்கு முன்னர் ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜீன்ஸ் படத்தில் நடித்த இவர் தற்போது இந்த படத்தில் நடித்துள்ளார்.

தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்பதால் மட்டுமே இந்த படத்தில் நடித்திருப்பதாகவும் கூறியுள்ளார். இவர் இந்த படத்தில் சமந்தாவுடன் சேர்ந்து நடனமாடியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Actress Lakshmi

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.