மீண்டும் பழையபடி உத்வேகமாக செயல்படும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர் திரையுலகில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கொடிக்கட்டி பறக்க தொடங்கினார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் நான்கு வருடங்களில் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

அதன் பிறகு மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சமந்தா தற்போது உடல்நிலை தேறிய பிறகு மீண்டும் பழையபடி படங்களில் நடிப்பது மற்றும் உடற்பயிற்சி செய்வது என உத்வேகமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் நாயுடன் விளையாடும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பதிவிட்டிருக்கிறார். அது தற்போது ரசிகர்களால் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.