இந்திய திரையுலகிலே மிக முக்கியமான நடிகை சமந்தா, தமிழ் சினிமாவில் பானா காத்தாடி என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இவர் 2017-ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இந்த ஜோடி 4 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு இரண்டாம் திருமணம் எனவும் மாப்பிளை தயாரிப்பாளர் டிவிவி தனய்யாவின் மகன் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல்கள் தீயாக பரவி வருகிறது.

தயாரிப்பாளர் மகன் ஆன கல்யாணுக்கும் நடிகை சமந்தாக்கும் ஹைதராபாத்தில் உள்ள மாதாபூரில் என் கன்வென்ஷன் மஹாலில் கல்யாணம் என்று கூறப்பட்டது.இது அனைத்தும் பொய்யான தகவலே.

தயாரிப்பாளர் மகன் கல்யாணுக்கு ஏற்கனவே கடந்த மே 20-ஆம் தேதி அன்றே கல்யாணம் நடந்து முடிந்தது.
அவர் மனம் முடித்த பெண்ணின் பெயரும் சமந்தா என்பதனால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதை சமூக வலைத்தளங்களில் பேசி வைரலாக்கி விட்டனர்.