Samantha in Bigg Boss

செம கெத்தா ஸ்டைலா பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.

Samantha Entry in Bigg Boss : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிக்கு தான் இந்த நிகழ்ச்சி புதியது. மற்ற மொழிகளில் பல சீசன்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழைப்போலவே தெலுங்கிலும் நான்காவது சீசன் ஒளிபரப்பாகிறது. இதனை தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சில காரணங்களால் தசரா பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியை நடிகை சமந்தா தொகுப்பாளராக தொகுத்து வழங்கி உள்ளார்.

இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமந்தாவின் ஸ்டைல், பேச்சு ஆகியவற்றை பார்த்த ரசிகர்கள் ஆஹா ஓஹோ என அவரை பாராட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.