Samantha Deletes Nagachaitanya Photos in Instagram

நாக சைதன்யாவை விவாகரத்து செய்த சமந்தா தற்போது அவருடைய சமூக வலைதள பக்கங்களில் இருந்து நாக சைதன்யா புகைப்படங்களை நீக்கியுள்ளார்.

Samantha Deletes Nagachaitanya Photos in Instagram : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. கிட்டத்தட்ட பத்து வருடங்களாக நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் நான்காவது திருமண நாளைக் கொண்டாடுவதற்கு முன்பாகவே நாக சைதன்யாவுடன் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு : இத்தாலி இந்தியர்கள் உற்சாக வரவேற்பு..

நாக சைதன்யாவுடன் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர் மன உளைச்சலில் இருப்பதாக கூறி வந்த சமந்தா சமீபத்தில் ஆன்மீகச் சுற்றுலா சென்று இருந்தார். விவாகரத்து ஒரு பக்கம் இருப்பினும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் சமந்தா.

இந்த நிலையில் நாக சைதன்யாவை விவாக ரத்து செய்துவிட்டதால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாக சைதன்யாவின் 75க்கும் மேற்பட்ட புகைப்படங்களை நீக்கியுள்ளார். தற்போது சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக சைதன்யாவின் ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே உள்ளன.

விஷால் ரொம்ப Strict-ஆ இருப்பாருன்னு நினைச்சேன்! – Actress Mirnalini Ravi Cute Speech |EnemyPressMeet

அதான் விவாகரத்து ஆகிடுச்சே.. இனி இது எதுக்கு என நாக சைதன்யாவின் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் இருந்து சமந்தா நீக்கிவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.