Samantha Costume Designer About Divorce

சமந்தாவுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக பேசி வருவது மட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறியுள்ளார் பிரபலம் ஒருவர்.

Samantha Costume Designer About Divorce : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு மூன்று வருடங்கள் முழுமையாக முடிந்து நான்காவது வருடம் தொடங்குவதற்குள் விவாகரத்து பெற்றார். இவர்களது விவாகரத்துக்கு காரணமாக பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று தான் ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கருக்கும் சமந்தாவுக்கும் தொடர்பு என சமூக வலைதளங்களில் தீயாக பரவிய தகவல்.

நவராத்திரி பூஜை : பரிபூரண அருள் பெற, இதோ ஸ்லோகம்

இதுகுறித்து தற்போது இந்த டிசைனர் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதாவது எனக்கும் சமந்தாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பேசி வருகின்றனர். உண்மையில் எனக்கு சமந்தா சகோதரி போல். நான் அவரை ஜீஜி என்றுதான் கூப்பிடுவேன். ஜி ஜி என்றால் சகோதரி என்று பொருள்.

கடைசியா Vivek Sir என்கிட்ட இதான் சொன்னாரு – மேடையில் கண்கலங்கிய Sundar C | Aranmanai 3 Press Meet

உங்களுக்குள் இருக்கும் உறவு பற்றி நாக சைதன்யா அவளுக்கும் தெரியும். அவர் எங்களை பற்றி ஒரே ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தால் இந்த பிரச்சனை பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும். மேலும் எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. இதனால் மன வேதனையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.