Samantha Birthday
Samantha Birthday

Samantha Birthday – கல்லூரி படிச்சிட்டு இருக்கும்போதே மாடலிங் துறையில கால் பதிச்ச சமந்தா, மெல்ல மெல்ல விளம்பர துறையில பிரபலமான ஒரு மாடலா உருவெடுத்தாங்க.

ஆரம்ப காலங்கள்ல சமந்தா நடிச்ச ஏராளமான விளம்பரங்கள் இப்பவும் இணையத்தில வலம் வந்திட்டு இருக்கு.

இதில ஒரு விளம்பரத்த பார்த்த ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், தான் இயக்குநரா அறிமுகமான மாஸ்கோவின் காவெரி படம் மூலமா அவங்கள ஹீரோயினா வெள்ளித்திரையில அறிமுகப்படுத்தி வெச்சாரு.

தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் கவனம் பெற்ற சமந்தா, கத்தி, தெறி படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி அந்தஸ்தை பெற்றார்.

தெலுங்கு திரையுலகுல நடிக்கும்போது சக நடிகரான நாக சைதன்யா மீது காதல் வயப்பட்ட சமந்தா போன வருஷம் இரு வீட்டார் சம்மதத்தோட அவர திருமணம் செஞ்சிக்கிட்டாங்க.

பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க. ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும். கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விட பிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.

இதன்மூலம் எந்த நடிகையும் செய்யாத சாதனையை படைத்திருக்கும் சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறது கலக்கல் சினிமா.