samantha Akkineni
samantha Akkineni

samantha Akkineni : பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க. ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும்.

இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விட பிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.

அந்தவகையில் தன் கணவர் நாக சைதன்யாவுடன் சமந்தா நடித்த மஜிலி படம் அண்மையில் தெலுங்கில் திரைக்கு வந்தது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த இப்படம் ஒரே வாரத்தில் 50 கோடி வரை வசூல் செய்து அசத்தியுள்ளது. இத்தனைக்கும் இப்படம் சுமாரான விமர்சனம் தான் பெற்றது.

எனினும் நாக சைதன்யா – சமந்தா ஜோடிக்காக படம் வசூலில் அசத்தி வருகிறது.

மேலும் நீண்ட காலமாக ஒரு நிலையான வெற்றிக்காக போராடி வந்த நாக சைதன்யாவுக்கு இப்படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் உடனடியாக சமந்தாவும் சைதன்யாவும் வேறொரு படத்தில் இணைந்து நடிக்க திட்டமிட்டுள்ளனர். இப்படம் பற்றிய அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here