Samantha Akkineni
Samantha Akkineni

Samantha Akkineni :

பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க. ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும்.

இந்த சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்கிறாரா தனுஷ்? வெளிவந்த ஆச்சரியத் தகவல் இதோ!

இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விட பிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.

அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.

அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

இதைதொடர்ந்து சமந்தா தன்னுடைய சம்பளத்தை 3 கோடியாக உயர்த்திவிட்டாராம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் தயாரிப்பாளர்களும் இந்த சம்பளத்தை தர தயாராக இருக்கிறார்களாம்.

நடிக்க வாய்ப்பு கொடுத்த சூப்பர் டீலக்ஸ் இயக்குனரையே பங்கமாக கலாய்த்த சமந்தா – வைரலாகும் ட்வீட்!

நடிகைகளில் நயன்தாரா மட்டுமே மூன்று கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெற்று வருகிறார்.

காரணம் அவருக்காக மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வரும். ஆனால் சமந்தா அந்த இடத்தை தற்போது பிடிக்க முயல்வது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.