பாலிவுட்டில் டாப் ஸ்டாராக இருக்கும் சல்மான் கானுடன் இணைந்து சமந்தா நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்பவர் தான் சமந்தா. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் அறிமுகமாகி, முதல் படத்திலேயே இரண்டு மாநிலங்களில் உள்ள ரசிகர்களின்  மனதில் இடம் பிடித்து விட்டார் என்றே சொல்லலாம்.

பாலிவுட் ஸ்டாருடன் இணைந்துள்ள சமந்தா - வெளியான தகவல்.

அதையடுத்து பிரபல தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த அக்டோபர் மாதம் சில கருத்து வேறுபாட்டின் காரணத்தால் இருவரும் பிரிந்து விட்டனர்.  அதன் பிறகு தனது முழு கவனத்தையும் நடிப்பில் திரும்பிய சமந்தா படும் கவர்ச்சியுடன் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதிலும் இவர் நடித்த “புஷ்பா” படத்திலுள்ள ஐட்டம் பாடலான ஊ சொல்றியா மாமா.. பாடலுக்கு ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த திரை உலகையும் தன் வசமாக்கி விட்டார். 

பாலிவுட் ஸ்டாருடன் இணைந்துள்ள சமந்தா - வெளியான தகவல்.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்கள் மற்றும்  விளம்பரங்களில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா தற்போது பாலிவுட்டில் டாப் ஸ்டாராக திகழும் சல்மான் கானுடன் இணைந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளஇப்படத்தை அனீஸ் பாஸ்மே என்பவர் இயக்குகிறார். இதில் சமந்தா மட்டுமின்றி  நடிகை தமன்னாவும் கதாநாயகியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.