Sam Anton to Direct Simbu | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | STR | Maanaadu | Vantha Rajavathaan Varuven

Sam Anton to Direct Simbu :

பல படங்களில் ஒப்பந்தமாகி வரும் சிம்பு சமீபத்தில் இளம் இயக்குனர் சாம் ஆண்டன் இடம் ஒரு கதையை கேட்டுள்ளாராம்.

இதுநாள்வரை சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அவர் திரும்பிய பக்கமெல்லாம் சர்ச்சைகள் வெடித்தாலும் அவரை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் கோரஸாக சொல்லும் ஒரு விஷயம், “சிம்பு ஒரு அபாரமான நடிகர்.

அவர் மட்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினால்.. நிச்சயம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவார்” என்பதுதான்.

செல்வராகவனுக்கு ஆக இப்படி எல்லாம் செய்தாரா சூர்யா – ஆச்சரியப்படுத்தும் தகவல்!

இதுநாள்வரை இதை கண்டும் காணாமலும் வந்த சிம்பு, தற்போது இதற்கு செவிசாய்த்திருப்பது போல் தெரிகிறது.

இனி ரசிகர்களுக்காக நல்ல படங்கள் கொடுப்பேன் என சிம்பு உறுதியளித்துள்ளார். அவர் தேர்வு செய்யும் படங்களும் அதை உறுதிப்படுத்துகிறது.

அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வரும் சிம்பு சமீபத்தில் இளம் இயக்குனர் சாம் ஆண்டன் இடம் ஒரு கதையை கேட்டுள்ளாராம்.

இந்த கதை அவருக்கு பிடித்து போனதால் இந்த கூட்டணி இணைய நிறையவே வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.