Salman Khan Photo shoot Trolls
Salman Khan Photo shoot Trolls

சினிமா மாதிரி நிஜ வாழ்க்கையிலும் நடிப்பு தானா என ரசிகர்கள் சல்மான்கானை விளாசி எடுத்து வருகின்றனர்.

Salman Khan Photo shoot Trolls : பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். மிகப் பெரிய நடிகராக வலம் வந்தாலும் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

மானை வேட்டையாடிய வழக்கு, சுசாந்த் சிங் தற்கொலை விவகாரம், பாலிவுட் சினிமாவில் நடக்கும் அரசியல் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

இதனால் சல்மான் கான் மீது மக்களிடையே வெறுப்பும் உண்டாக துவங்கியுள்ளது.

இந்த நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் முழுவதும் சேற்றுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

என்னது LKG படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? இப்படி மிஸ் பண்ணிடீங்களே தளபதி – வெளியான ஷாக்கிங் தகவல்!

இப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சினிமாவில் மட்டும் நடிங்க நிஜ வாழ்க்கையிலும் ஓவர் ஆக்டிங் பண்ணாதீங்க என விமர்சனம் செய்து வருகின்றனர். நீங்க மகாநடிகன் எனக் கூறுகின்றனர்.

காரணம் உடல் முழுவதும் சேற்றை வாரிப் பூசிக் கொண்டு புகைப்படத்தை எடுத்துள்ளார் சல்மான் கான். அவர் சேற்றை பூசிக் கொண்டு இருப்பது அப்பட்டமாக தெரிவதால் ரசிகர்கள் அவரை விளாசி எடுத்து வருகின்றனர்.

விவசாய நிலத்தில் கஷ்டப்படும் விவசாயிக்கு கூட இப்படி உடல் முழுவதும் சேறு படியாது எனவே ரசிகர்கள் கூறி விமர்சித்து வருகின்றனர்.