ரகசிய திருமணம் முடிந்து 17 வயதில் மகள் இருப்பதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் சல்மான் கான்.

Salman Khan Clarification About Marriage : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். ஹீரோவாக நடிப்பது மட்டுமல்லாமல் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய வண்ணம் உள்ளார். 55 வயது ஆகியும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு பல நடிகைகளுடன் நெருக்கமாக இருந்து வந்த நிலையிலும் யாரையும் மணக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் சல்மான் கானுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது 17 வயதில் மகள் இருக்கிறாள். அவருடைய மனைவி மற்றும் மகள் என இருவரும் மும்பையில் வசித்து வருகின்றனர் என பதிவு ஒன்று பதிவானது.

ஒலிம்பிக் டுடே : தமிழக வீராங்கனை இளவேனில், நல்ல வாய்ப்பை இழந்தார்

இந்த பதிவால் பாலிவுட் சினிமாவில் இது குறித்த பரபரப்பான விவாதங்கள் நடைபெற தொடங்கின. இப்படியான நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சல்மான்கானிடம் இதுகுறித்து கேட்டதற்கு எனக்கு திருமணம் ஆனதாக வெளியான தகவல் பொய். நான் என்னுடைய 9 வயதிலிருந்து இந்தியாவிலுள்ள கேலக்ஸி குடியிருப்பில் தான் வசித்து வருகிறேன் இது அனைவருக்கும் தெரியும் என கூறியுள்ளார்.

இந்த 2 வகை ஆண்களில் யாரை Date பண்ணுவீங்க? – Nandita Swetha-வின் விசித்திரமான பதில்! | HD