
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து அவர் தற்போது புல்லட் ப்ரூப் கார் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான் என்பதும் அவருக்கு சமீபத்தில் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து இவர் தனது பாதுகாப்பை அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை சல்மான்கான் மும்பை விமான நிலையம் வந்தபோது அவர் புதிய புல்லட் குரூப் நிசான் காரில் வந்திருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். அவர் ஏற்கனவே பல கார்கள் வைத்திருந்தாலும் புல்லட் குரூப் வசதி கொண்ட முதல் கார் இது என்று கூறப்படுகிறது.
மேலும் அவர் தனது பாதுகாப்பு பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் மெய்க்காவலர்கள் சூழ தான் அவர் வெளியே வருகிறார் என்றும் தெரிகிறது. மேலும் சல்மான் கான் தனக்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து காவல்துறையின் அனுமதியுடன் அவர் துப்பாக்கி லைசென்ஸ் வாங்கி வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ’பதான்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சல்மான் கான் தற்போது ‘டைகர் 3’ உள்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.