Salman Khan As Former
Salman Khan As Former

Salman Khan As Former  : 54 வயதாகும் இந்தியாவின் சூப்பர் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார் நடிகர் சல்மான் கான். தன்னை பற்றி யார் என்ன சொன்னாலும், அதை பற்றியெல்லாம் கவலைப் படாமல், நம்பிக்கை விதையை விதைத்துக் கொண்டு இருப்பதை போல, பச்சை வயல்களுக்கு நடுவே பாசிட்டிவிட்டியை க்ரியேட் செய்து வருகிறார் நடிகர் சல்மான் கான்.

முற்றிலுமாக விவசாயியாகவே மாறிய அவர், தனது வயல் வெளியில் நின்றபடி சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட புகைப்படம் பலரது மனங்களையும் கொள்ளை அடித்து இருந்தது.

இந்நிலையில், தற்போது உடல் முழுவதும் சேறு பட்ட நிலையில், சல்மான் கான் எடுத்துள்ள புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, ” Respect to all the farmers” என கேப்ஷன் கொடுத்து ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் ராயல் சல்யூட் வைத்துள்ளார் சல்மான் கான். அவரது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், வேற லெவலில் அவரை பாராட்டி வருகின்றனர்.

சல்மான் கானின் இந்த புகைப்படத்தை பார்த்த சில நெட்டிசன்கள், இது உலக மகா நடிப்புடா, உண்மையான விவசாயி கூட இந்த அளவுக்கு உடம்புல சேத்த பூசிக்க மாட்டான்.. படத்துல தான் இப்படி நடிக்கிறீங்கன்னா.. போட்டோவுக்கு கூட இப்படி நடிக்கணுமா? என அவரது உடலில், ஃபேக்காக மண் பூசப்பட்டு இருக்கிறது என்று வட்டம் போட்டு காண்பித்து பங்கமாக ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.