
வெள்ளித்திரையில் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் ஆகிறது சக்திமான் தொடர்.
தமிழ் சின்னத்திரையில் 90களில் ஒளிபரப்பாகி அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்த ஒரு தொடர் தான் சக்திமான். முகேஷ் கண்ணா ஹீரோவாக நடித்திருந்த இந்த தொடர் தற்போது வரை 90 கிட்ஸ் மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்த தொடர் வெள்ளித்திரையில் படமாக இருப்பதாக முகேஷ் கண்ணா தெரிவித்து இருந்தார். ஆனால் கொரானா காரணமாக இந்த படம் தொடங்காமல் தள்ளி போனது.

இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
இதனால் சக்திமான் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது யார்? கதைக்களம் எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எழுந்துள்ளது.
சக்திமான் படத்தில் ஹீரோவாக யார் நடித்தால் சூப்பராக இருக்கும் என்பதை நீங்கள் கமெண்ட்டில் சொல்லுங்க.
