
ஆதிரைக்கு யாருடன் கல்யாணம் நடக்கும் என்ற கேள்விக்கு பேட்டியில் பதில் அளித்துள்ளார் எதிர்நீச்சல் சக்தி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஆதிரையின் காதல் விஷயம் வீட்டுக்கு தெரிந்து குணசேகரன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

பிடிவாதமாக இருந்து கரிகாலனுடன் ஆதிரைக்கு கல்யாணம் என தாம்பூலத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இதனால் அடுத்து என்ன நடக்கும் அதிரை ஆசைப்பட்டபடி அருணுடன் கல்யாணம் நடக்குமா? அல்லது கரிகாலனுடன் கல்யாணம் நடக்குமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சக்தியாக நடிக்கும் சபரி அளித்துள்ள பேட்டி ஒன்றில் அடுத்து என்ன நடக்கும் என்பது எங்களுக்கே தெரியாது. எங்களுக்கே இன்னைக்கு நடக்கப்போவது என்ன என்பது காலையில் சூட்டிங் போது தான் தெரியும்.

நாங்களும் ரசிகர்களை போலத்தான் அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள காத்துக் கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.