Sakshi Agarwal
ஒத்த டீவீட்டில் கவினை மறைமுகமாக வெறுப்பேற்றியுள்ளார் சாக்ஷி அகர்வால்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்ஷிக்கும் கவினுக்கும் இடையே காதல் மலர்ந்து பின்னர் அந்த காதலை கவின் விளையாட்டு என கூறி சர்ச்சைக்குள்ளானார்.

இதனால் சாக்ஷிக்கும் கவினுக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே பிரச்சனை ஏற்பட்டது. அதன் பின்னர் கவினும் லாஸ்லியாவும் காதலிக்கவே சாக்ஷி ஒதுங்கி கொண்டார்.

இந்நிலையில் சாக்ஷி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு சிலரை என் வாழ்க்கையில் சந்திக்காமல் இருந்திருந்தால் எதிர்காலத்தில் நான் சந்திக்க கூடாததை அவர்கள் கற்று கொடுக்க முடியாமல் போயிருக்கும் என கூறியுள்ளார்.

சாக்ஷியின் டீவீட்டை பார்த்த நெட்டிசன்கள் நீங்க கவினை தான் சொல்றீங்கனு நல்லாவே தெரியுது. பழையதை மறந்துட்டு வேலையை பாருங்க என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.