Sakshi Aggarwal Kurumpadam : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Reshma, Mugen Rao, Sandy
சாக்ஷி செய்த தவறை ரசிகர்கள் கண்டுபிடித்து அதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளனர்.

Sakshi Aggarwal Kurumpadam : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது சென்று கொண்டிருக்கிறது.

ஆரம்பத்திலேயே ஒருமுறை மீரா மிதுன் முகெனை யாரிடமும் பேச வேணாம் என கூறுவதாக சாக்ஷி அகர்வால் தவறாக பேசி விட்டு அதன் பின்னர் நான் பேசவில்லை என கூறினார்.

அதன் பின்னர் தற்போது மீண்டும் அதே போல் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார். மீரா மிதுன் ரேஸ்மாவிடம் டாஸ்கில் நானும் தான் வேலை செய்தேன். ஆனால் அது வெளியே தெரியவில்லை என புலம்பினார்.

அப்போது சாக்ஷி அகர்வால் தான் நான் ஒரு மீட்டிங் அரேஞ்சு பண்றேன், நீ எல்லாரிடமும் சொல்லு என பேசியுள்ளார். ஆனால் மீட்டிங் போட்ட பிறகு நீதானா மீட்டிங் போட சொன்ன என கூற மீரா நான் சொல்லல என கூறியுள்ளார்.

தற்போது மீட்டிங் குறித்து முதலில் பேசியது சாக்ஷி அகர்வால் தான் என்பது இந்த வீடியோவில் தெளிவாகியுள்ளது, இதனால் இந்த வாரம் இது குறும்படமாக கமல்ஹாசனின் போட்டு காண்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here