
ட்ரெடிஷனல் உடையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கும் சாக்ஷி அகர்வால்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாக்ஷிஅகர்வால். மாடலிங் துறையை சார்ந்த இவர் ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது நான் கடவுள் இல்லை, பாகீரா ஆகிய திரைப்படங்களில் மெயின் ரோலில் நடித்து தற்போது வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார்.

இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது வித்தியாசமான உடைகளில் எடுக்கப்படும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் புடவையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது.