ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சாக்ஷி அகர்வால்.

தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்த நடிகையாக பயணத்தை தொடங்கி பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான சாக்ஷி அகர்வால் தற்போது நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து தினம் தோறும் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது instagram பக்கத்தில் அழகான தாவணியில் கண்களை கவரும் அளவிற்கு போட்டோஷூட் செய்து பொங்கல் திருநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாக பரவி வருகிறது.