ரிலீசுக்கு முன்பாகவே பல விருதுகளை வென்ற சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை படத்தின் முழு விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Sakkarai Thukkalai Oru Punnagai Review : இயக்குனர் மகேஷ் பத்மநாபன் இயக்கத்தில் ருத்ரா, சுபிக்ஷா, உட்பட பலர் இணைந்து நடித்துள்ள படம் சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை. பல்வேறு விருதுகளை வென்றுள்ள இந்த திரைப்படம் நாளை முதல் திரைக்கு வர உள்ளது.

படத்தின் கதைக்களம் :

சவுண்டு ரெக்கார்டிங்கில் கோல்ட் மெடல் வாங்கியவர் ருத்ரா. ஒரு வானொலியில் ஆர்ஜே-வாக பணியாற்றி வருபவர் சுபிக்ஷா. ஒரு பிராஜக்ட் காரணமாக ருத்ராவை தேடிச் செல்கிறார் சுபிக்ஷா. ஏற்கனவே தனக்கு ஒருவருடன் நிச்சயதார்த்தம் ஆனதை மறைத்து அவரை காதலிப்பதாக கூறி அவரிடம் இருந்து வேலையை வாங்கிக் கொள்கிறார்.

முருகனின் வடிவங்களும், வழிபாட்டுப் பலன்களும்.!

இதே பாணியில் மீண்டும் மீண்டும் ருத்ராவிடம் வேலையை வாங்கிக் கொள்கிறார் சுபிக்ஷா. ஆனால் சுபிக்ஷாவை உண்மையாக காதலித்து வரும் ருத்ராவுக்கு கடைசியில் அவருக்கு நிச்சயதார்த்தம் ஆன உண்மை தெரிய வர அதன் பின்னர் இவரது இருவரின் வாழ்க்கை என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

என்ன Impress-பண்ண இந்த Qualities இருந்தா மட்டும் போதும் – Exclusvie Interview With Meenakshi..! | HD

படத்தைப் பற்றிய அலசல் :

அறிமுக நடிகராக இருந்தாலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ருத்ரா. பிறந்தது மலையாளியாக இருந்தாலும் தன்னுடைய முதல் படத்திலேயே தமிழில் டப்பிங் பேசி அசத்தியுள்ளார்.

நாயகியாக நடித்துள்ள சுபிக்ஷா அவரது கதாபாத்திரத்தை அழகாக நடித்துள்ளார்.

படத்திற்கு இசையும் ஒளிப்பதிவும் பெரும் பலமாக அமைந்துள்ளது. இசையைப் பொறுத்தவரை ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார் ராஜூ அப்புகுட்டன். காடுகளில் எடுக்கப்பட்ட காட்சிகள் மிக அழகாக வந்துள்ளன. ஒளிப்பதிவில் பிரத்யேக கவனம் செலுத்தியுள்ளார் பிஜூ விஸ்வநாத். இதற்காகவே இந்தப் படம் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.

இயக்குனர் மகேஷ் பத்மநாபன் ஒரு வித்யாசமான கதை களத்தை கையில் எடுத்து அதை அழகாக கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை தனிரகம்.