Saina Nehwal :
Saina Nehwal :

Saina Nehwal : மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி இந்தோனேசியாவைச் சேர்ந்த மவுலானா முஸ்தபாவை எதிர்த்து விளையாடினார்.

இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 21-18, 21-16 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ப்ரீமியர் பாட்மிண்டன் லீக் – ஆமதாபாத் வெற்றி!

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து ஜப்பானின் அயா ஒஹோரியை எதிர்கொண்டார்.

இதில் பிவி சிந்து 22-20, 21-12 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றில் பிவி சிந்து 7-12, 16-19 என பின்தங்கியிருந்தார். அதன்பின் 22-20 என வெற்றி பெற்றார்.

அதே சமயம் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால், தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவீ சோச்சுவாங்கை எதிர்கொண்டார்.

இதில் செட்டை சாய்னா கடும் போராட்டத்திற்குப் பின் 22-20 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 15-21 எனவும், 3-வது செட்டை 10-21 எனவும் இழந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.