Sai Pallavi With Sister

நடிகர் சாய் பல்லவி தன்னுடைய தங்கச்சியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

Sai Pallavi With Sister : மலையாள சினிமாவின் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதையும் மலர் டீச்சராக கவர்ந்து சென்றவர் சாய் பல்லவி.

மலையாள படத்தை தொடர்ந்து தெலுங்கில் காலடி எடுத்து வைத்தார். இங்கும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் விஜய் இயக்கத்தில் வெளியான தியா என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன்பின்னர் தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்தார்.

மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக செல்வராகவன் இயக்கத்தில் உருவான என் ஜி கே படத்தில் நடித்தார். இந்த படங்களில் சாய் பல்லவி நடிப்பு பாராட்டப்பட்டது. தற்போது சாய்பல்லவி தன்னுடைய தங்கையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

புகைப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் சாய்பல்லவி யைப் போலவே அவருடைய தங்கையும் செம அழகாக இருப்பதாக கூறி போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர்.