Sai Pallavi to romance Naga chaitanya : Kollywood, Latest Cinema News, Tamil Cinema News, is an Indian actress and dancer who appears in Tamil

Sai Pallavi to romance Naga chaitanya :

முன்னணி இயக்குநர் சேகர் கமுல்லா இயக்கத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாகதான் ஒரு படத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ளாராம்.

பிரேமம் படத்தின் மூலம் தென்னக மொழி ரசிகர்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சாய் பல்லவி.

தமிழில் இவர் நடித்த தியா, மாரி 2 போன்ற படங்கள் தோல்வியடைந்தாலும் இவருக்கு இன்றும் தமிழகத்தில் ஒரு கிரேஸ் உண்டு.

அதே போல் தெலுங்கில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அங்கும் இவரை ஒரு முன்னணி நடிகையாகவே பார்க்கிறார்கள்.

அந்தவகையில் அடுத்ததாக இவர் Virata Parvam 1992 என்ற தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார்.

சாய் பல்லவியை இப்படியெல்லாம் டார்ச்சர் செய்தாரா செல்வராகவன் – வெளிவந்த உண்மை!

இதன் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது. ரானா டகுபதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாகவும் பிரியாமணி, தபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கவுள்ளனர்.

இதுபோக தற்போது இன்னொரு தெலுங்கு படத்திலும் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார்.

முன்னணி இயக்குநர் சேகர் கமுல்லா இயக்கத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாகதான் ஒரு படத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ளாராம். நாக சைதன்யா, சமந்தாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.