Sai Pallavi Reject Pawan Kalyan Movie

அவருடன் ஜோடி போட்டு நடிக்க முடியாது என 49 வயது நடிகருக்கு நோ சொல்லியுள்ளார் நடிகை சாய் பல்லவி.

Sai Pallavi Reject Pawan Kalyan Movie : தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை சாய் பல்லவி. மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து மக்களின் மனதை கொள்ளையடித்தார். இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் எக்கச்சக்கமான வாய்ப்புகள் சாய்பல்லவிக்கு குவிந்து வருகின்றன.

ஆனால் தமிழில் அவருடைய நடிப்பு பெரிய அளவில் எடுபடவில்லை. தெலுங்குவில் சாய்பல்லவி இடுப்பை வளைத்து ஆடும் ஆட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் இலகுவில் நடிகர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க சாய்பல்லவி அணுகியபோது அவர் ஏதேதோ காரணங்களைச் சொல்லி இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

நடிகர் பவன் கல்யாணுக்கு 49 வயது என்பதால் சாய்பல்லவி இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ஐயப்பனும் குரோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் சாய் பல்லவியை நடிக்க அணுகியுள்ளனர்.

இந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக ராணா டகுபதி நடிக்க அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.