Sai Pallavi in Rajamouli's RRR
Sai Pallavi in Rajamouli's RRR

Sai Pallavi in Rajamouli’s RRR

அவர் ரோலில் பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக நாம் சொல்லி இருந்தோம்.

ஆனால் தற்போது அந்த வேடத்தில் நடிக்க சாய் பல்லவி இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி தற்போது இயக்கிவரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’.

ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆரின் ஜோடியாக நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் ராம் சரண் ஜோடியாக அலியா பட் நடித்து வருகிறார்.

மீண்டும் இணைந்த இசைஞானி – எஸ்.பி.பி; இசை ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம்தான்!

இப்படத்தில் குணச்சித்திர நடிகைகளில் ஒருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் என்பவர் திடீரென இந்த படத்தில் இருந்து விலகியது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து அவர் ரோலில் பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக நாம் சொல்லி இருந்தோம்.

ஆனால் தற்போது அந்த வேடத்தில் நடிக்க சாய் பல்லவி இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

குறுகிய காலத்திலேயே சாய் பல்லவி தென்னக அளவில் ஒரு பெரிய ஸ்டார் ஆகிவிட்டார் இவரை நடிக்க வைத்தால் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பெரிய மார்க்கெட் கிடைக்கும் என்பதால் தற்போது இவரையும் இப்படத்தில் ஒரு அங்கமாக மாற்ற படக்குழு முயற்சி செய்து வருகிறதாம்.

இதற்காக முதலில் ஆங்கிலேயர் என்பது போல இருந்த அந்த கதாபாத்திரத்தை தற்போது இந்தியாவை சேர்ந்த பெண் கதாபாத்திரமாக ராஜமௌலி மாற்றி வருகிறாராம்.