அப்பா, அம்மா மற்றும் தங்கையுடன் சாய்பல்லவி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

Sai Pallavi in Family Photo : மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சாய்பல்லவி. இந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்குவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் ஏ எல் விஜய் இயக்கத்தில் தியா, தனுசுக்கு ஜோடியாக மாரி 2 மற்றும் சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அப்பா, அம்மா, தங்கையுடன் சாய் பல்லவி.. இணையத்தை கலக்கும் அழகிய புகைப்படம்

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சாய்பல்லவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பா, அம்மா மற்றும் அழகிய தங்கையுடன் எடுத்த குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.