பிரேமம் படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே தமிழ் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார் நடிகை சாய் பல்லவி.

Sai Pallavi in Dhaam Dhoom Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. மலையாள சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பிரேமம். இந்த படத்தில் மலர் டீச்சராக திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் சாய்பல்லவி.

பிரேமம் படத்திற்கு முன்னதாகவே தமிழ் படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி.. அப்போ எப்படி இருந்து இருக்கார் பாருங்க - வெளியான ஷாக்கிங் புகைப்படங்கள்

பிரேமம் படத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அங்கும் வெற்றி கண்டார். அதன் பின்னர் தமிழில் வெளியான தியா என்ற படத்தில் நடித்தார். ஆனால் முதல் படமான இப்படம் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை தரவில்லை. இதனையடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 மற்றும் சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பிரேமம் படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே சாய்பல்லவி தமிழ் சினிமாவின் ஜெயம் ரவி, கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தாம்தூம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் சாய்பல்லவி வரும் காட்சிகள் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் திடீரென வைரல் ஆகி வருகின்றன.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சாய்பல்லவி இது என்று வியந்து வருகின்றனர்.