Sai Pallavi in Bollywood Movie

நடிகை சாய் பல்லவி பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sai Pallavi in Bollywood Movie : மலையாள சினிமாவின் பிரேமம் படத்தின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களை மலர் டீச்சராக கவர்ந்தவர் சாய் பல்லவி. இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். மேலும் தமிழில் ஏ எல் விஜய் இயக்கத்தில் தியா, மாரி 2, என் ஜி கே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளைத் தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைக்க உள்ளார் சாய் பல்லவி. கடந்த 2005ஆம் ஆண்டுக்கு பின் வெளியான சத்ரபதி திரைப்படத்தினை இந்தியில் ரீ-மேக் செய்ய உள்ளனர்.

இது தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்கத்தான் சாய்பல்லவி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சாய்பல்லவி ஓகே சொல்லிவிட்டால் பாலிவுட் சினிமாவில் அவர் அடியெடுத்து வைத்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.