Sai Pallavi

Sai Pallavi : பிரேமம் படத்தின் மூலம் தென்னக மொழி ரசிகர்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சாய் பல்லவி.

தமிழில் இவர் நடித்த தியா, மாரி 2 போன்ற படங்கள் தோல்வியடைந்தாலும் இவருக்கு இன்றும் தமிழகத்தில் ஒரு கிரேஸ் உண்டு.

அதே போல் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அங்கும் இவரை ஒரு முன்னணி நடிகையாகவே பார்க்கிறார்கள்.

உங்க அழகு இன்னும் குறையவே இல்ல – மேக்கப் இல்லாமல் குஷ்பூ வெளியிட்ட புகைப்படம்.!

இந்நிலையில் ஒரு ஃபேர்னஸ் கிரீம் விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவியை ஒரு நிறுவனம் அணுகியதாம். இந்த விளம்பரத்திற்காக இரண்டு கோடி கொடுப்பதாக சொல்லியும் அதை சாய் பல்லவி மறுத்துவிட்டாராம்.

“நான் ஒருபோதும் அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன். அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும் ஒருவருடைய அழகு மாறிவிடாது.

மேக்கப் போட்டால் வேறு ஒருவர் போல தெரிகிறேன் என்று எனக்கு வேண்டியவர்கள் கூறுகிறார்கள்.

அதன் காரணமாக தான் மேக்கப் போடாமல் நடிக்கிறேன். அதை தான் இயக்குனர்களும் விரும்புகின்றனர்” என்று இதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.

ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் அதிரன் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.