Sai Pallavi
நடிகை சாய்ப்பல்லவி எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் நடிக்கவே மாட்டேன் என்று மறுத்து உள்ளார்.

வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் சாய்ப்பல்லவி அதிக ரசிகர் கூட்டம் கொண்டவர். இவர் தமிழ் பெண்ணாக இருந்தாலும், முதலில் மலையாள படத்தில் தான் சினிமா உலகிற்குள் நுழைந்தார்.

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உள்ளார். பிறகு, தனது படிப்பில் கவனம் செலுத்தியவர், திடீரென பிரமம் படத்தில் மலர் டீச்சராக வந்தார்.

அம்மாவாவது எப்போது? ரசிகரின் கேள்விக்கு சமந்தா கொடுத்த பதிலடி – வைரல் வீடியோ.!

அறிமுகமான முதல் படத்திலேயே இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் NGK.

இவரின் ரவுடி பேபி பாடல் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இந்த நிலையில், இவரருக்கு 1 கோடி சம்பளம் கொடுப்பதாக சொல்லியும் நடிக்க மறுத்து உள்ளார்.

முக அழகு பொருட்களின் விளம்பரத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. இதற்கு 1 கோடி சம்பளம் அளிப்பதாகவும் கூறினார்களாம்.

ஆனால், அதற்கு சாய்ப்பல்லவி மறுப்பு தெரிவித்து உள்ளார். மேலும், இதனை தொடர்ந்து, ஆடை கடை விளம்பரத்திலும் நடிக்க அழைப்பு வந்ததாம்.

அதற்கும் மறுத்து உள்ளார். மேலும், இவரை போன்றே நயன்தாராவும் சில விளம்பரங்களில் நடிக்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here