நடிகர் சூர்யா குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு சச்சின் டெண்டுல்கர் கூறிய பதில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் மாபெரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் “கங்குவா” திரைப்படத்தில் நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை திஷா பதானி நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் பத்து மொழிகளில் வெளியாக இருப்பதால் படம் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் சச்சின் டெண்டுல்கருடன் சூர்யா இணைந்து எடுத்திருந்த புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலானது. ஆனால் தற்போது அது குறித்து கேள்வி எழுப்பிய ரசிகருக்கு சச்சின் அளித்திருக்கும் பதில் வைரலாகி வருகிறது.

அதாவது நேற்றைய தினம் சச்சின் டெண்டுல்கர் #AskSachin என்று ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் சூர்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சச்சின், “நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் மிகவும் கூச்சமாக இருந்தோம், ஒருவரையொருவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை, ஆனால் அதன் பிறகு தங்களது உரையாடல் நன்றாகவே முடிந்தது” என பதில் அளித்துள்ளார். அந்த பதிவு தற்போது சூர்யாவின் ரசிகர்களால் சோசியல் மீடியாவில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.