SAC Speech not going well with Fans : Thalapathy Vijay, Shoba, Kepmari Movie, Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

SAC Speech not going well with Fans :

எஸ்.ஏ.சந்திரசேகர்.. இன்று விஜய்யின் தந்தை என எல்லோராலும் அடையாளம் கொள்ளப்படும் இவர் 80-களில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்.

குறிப்பாக இவர் படங்களின் நாயகர்கள் நீதிக்காக போராடுபவர்களாக இருந்ததாலும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஆளும் அரசுக்கு எதிராக படம் எடுத்ததாலும் புரட்சிகரமான இயக்குனர் என்று பெயர் பெற்றவர்.

ஆனால் இதெல்லாம் 80-கள் வரையில்தான். அதன்பின் 1992-ம் ஆண்டு தனது மகன் விஜய்யை ஹீரோவாக அறிமுகம் செய்த எஸ்.ஏ.சி, அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க கவர்ச்சி ரூட்டுக்கு தாவினார்.

தனது மகன் விஜய்யை வைத்து இவர் இயக்கிய ரசிகன், செந்தூரப்பாண்டி, தேவா ஆகிய படங்கள் அதில் இடம்பெற்ற ஆபாச காட்சிகளுக்காகவும் இரட்டை அர்த்த வசனங்களுக்காகவும் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.

விஜய் நடிப்பு, சந்திரசேகர் இயக்கம், ஷோபா சந்திரசேகர் தயாரிப்பு என குடும்பமாக இவர்கள் சேர்ந்து எடுத்த படங்களை குடும்பத்தோடு பார்க்கவே முடியாது என சொல்லும் அளவு அதில் ஆபாசங்கள் நிரம்பி வழிந்தன.

இதனால் புரட்சி இயக்குனர் என்று அறியப்பட்டவர் ஒருகட்டத்தில் ஆபாச இயக்குனர் என்று முத்திரை குத்தப்பட்டார். பின்னர் தனது தந்தையை விட்டு நல்ல கதையம்சம் கொண்ட வெளி இயக்குனர்களின் படங்களில் நடித்த விஜய், இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துவிட்டார்.

ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஏ.சி இயக்கிய முத்தம், சுக்ரன் ஆகிய படங்களிலும் கூட ஆபாசமான காட்சிகள் இடம்பெற்று பார்ப்போரை முகம் சுளிக்க வைத்து சர்ச்சையை கிளப்பியது.

இதுநாள்வரை தன்னுடைய திரைப்படங்களுக்காக விமர்சனங்களை சம்பாதித்துவந்த எஸ்.ஏ.சி, தற்போது பொதுவெளியில் தான் பேசிய கருத்துக்களுக்காக எதிர்ப்பு குரல்களை பெற்று வருகிறார்.

எஸ்.ஏ.சி இயக்கத்தில் ஜெய் நாயகனாக நடித்திருக்கும் கேப்மாரி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய எஸ்.ஏ.சி, ” இந்த காலத்து பெண்கள் ஒரேநேரத்தில் நான்கு பேரிடம் காதலை சொல்கிறார்கள்” என பேசியது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

கண்திருஷ்டி என்பது உண்மையா? பொய்யா? தெரிந்து கொள்வோமா!

பெண்கள் குறித்த எஸ்.ஏ.சி-யின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் வலுப்பெற்று வரும் நிலையில் இது அவர் படத்திற்கான விளம்பர யுக்தி என்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் இதுநாள்வரை தன் படங்களில் இடம்பெற்ற ஆபாச காட்சிகளுக்காக விமர்சனங்களை எதிர்கொண்ட எஸ்.ஏ.சி, தற்போது தனது கருத்துக்காக எதிர்ப்புகளை பெறுவது திரையுலகின் பேசுபொருளாக மாறியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.