Vijay Home
தளபதி விஜய் வீட்டில் இருக்கும் பூஜை அறை புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார் எஸ்.ஏ.சி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் சக நடிகர்களை மதமாற்றம் செய்ய வைப்பதாகவும் தன்னுடைய மனைவியை மதமாற்றம் செய்த பின்னரே திருமணம் செய்ததாகவும் சில அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எஸ்.ஏ சி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார், அந்த பேட்டியில் நாங்கள் கிறிஸ்டியன் தான். அதில் எனக்கு பெருமை தான்.

கிறிஸ்துவ மதம் உன் மதத்தை நேசிப்பது போல மற்ற மதத்தையும் நேசி என்று தான் கூறுகிறது. இதுவரை நானும் சரி விஜயும் சரி மதத்தை பார்த்து யாருக்கும் வேலை கொடுத்ததில்லை. திறமை இருந்தால் எங்களுடன் பணியாற்றலாம்.

என்னுடைய மனைவி ஹிந்து.. எங்கள் திருமணம் ஹிந்து முறைப்படி தான் நடந்தது, நான் நினைத்திருந்தால் அன்றே பிரச்சனை செய்திருக்கலாம். ஆனால் இன்று வரை என்னுடைய மனைவி சுதந்திரத்தில் தலையிட்டது இல்லை.

விஜய் அவருடைய மனைவியை மதமாற்றம் செய்து திருமணம் செய்ததாக கூறப்படுவது உண்மை இல்லை. அவர்கள் திருமணம் எங்கு நடந்தது? எப்படி நடந்தது? என்பது பற்றி ஆதாரம் என்னிடம் உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய வீட்டின் பூஜையறை புகைப்படத்தையும் அவர் பிரபல டிவி சேனல் மூலமாக வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.