SAC in Political Party Name

தளபதி விஜயின் தந்தை தொடங்கிய புதிய கட்சியின் பெயர் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

SAC in Political Party Name : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது தந்தை இயக்குனர் சந்திரசேகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக இடம் பிடித்திருப்பவர் தான் எஸ் ஏ சந்திரசேகர். தளபதி விஜயின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர்.

அப்படி இருந்தும் கடந்த சில வருடங்களாக இவருக்கு விஜய்க்கும் இடையே முரண்பாடுகள் இருந்து வருகிறது.

தளபதி விஜயின் அனுமதி இல்லாமல் அவரது பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்து சர்ச்சையில் சிக்கினார். அரசியலுக்காக என்னுடைய பெயரை பயன்படுத்தினால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என விஜய் தன்னுடைய தந்தையை எச்சரித்திருந்தார்.

இதனையடுத்து சந்திரசேகர் அவர்கள் புதிய கட்சியை பதிவு செய்யும் முயற்சியை கைவிட்டார். பின்னர் மீண்டும் வேறொரு பெயரில் தன்னுடைய கட்சியைப் பதிவு செய்துள்ளார்.

தன்னுடைய புதிய கட்சிக்கு அவர் செக்யூர் அவர் சிட்டி ( Secure Our City ) என பெயரிட்டுள்ளார்.