மாநாடு படத்தின் வெற்றி விழாவுக்கு நடிகர் சிம்பு வராத நிலையில் அவரைத் திட்டி தீர்த்துள்ளார் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்.

SAC Chandrasekar Blast Simbu : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்திருந்த பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற நிலையில் நடிகர் சிம்பு பங்கேற்கவில்லை.

இதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் சிம்புவை பற்றி பேசியுள்ளார். கதாநாயகனை நம்பி தயாரிப்பாளர் எவ்வளவு முதலீடு போட்டு இருப்பார். இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்ற நிலையில் படத்தின் கதாநாயகன் இந்த படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு இருக்க வேண்டும். அப்படி என்ன ஷூட்டிங்? அவர் இல்லாமல் போனது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.

இப்படி எல்லாம் இருந்தால் இன்னொரு வெற்றி கிடைக்காது.. மாநாடு படத்தின் வெற்றி விழாவிற்கு ஆப்சென்டான சிம்புவை திட்டிய எஸ் ஏ சந்திரசேகர்

எப்போதும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். படத்தின் சூட்டிங்கில் எப்படி இருந்தோமோ அதே மாதிரிதான் வெற்றி விழாவிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் இன்னொரு வெற்றி கிடைக்கும் என பேசியுள்ளார்.

#sac talks about #simbu #maanadu #maanadusucessmeet

இப்படி எல்லாம் இருந்தால் இன்னொரு வெற்றி கிடைக்காது.. மாநாடு படத்தின் வெற்றி விழாவிற்கு ஆப்சென்டான சிம்புவை திட்டிய எஸ் ஏ சந்திரசேகர்

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் இந்த பேச்சு சிம்பு ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருவதால் இந்த படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என சொல்லப்படுகிறது.

பத்திரிகையாளருக்கு நன்றி தெரிவித்தார், கோலியின் காதல் மனைவி அனுஷ்கா