விஜய்யின் ஜாதிச் சான்றிதழ் அவசியம் குறித்து பகிரங்கமாக மேடையில் பேசியுள்ளார் எஸ் ஏ சந்திரசேகர்.

SAC About Vijay in Caste : ‘ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர். சலீம் மற்றும் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார். முத்து முனுசாமி படத்தொகுப்பை கவனித்துள்ளார். யுகபாரதி, விவேகா, அந்தோனிதாசன், பொன் சீமான் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், சாய்ரமணி, ஜாக்குவார் தங்கம், நடிகர் போஸ் வெங்கட், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி..எஸ்.ஆர் சுபாஷ், நடிகைகள் கீர்த்தனா, கோமல் சர்மா, ஷாஸ்வி பாலா, பாடலாசிரியர்கள் கம்பம் குணாஜி, சொற்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இயக்குனர் எஸ்/ஏ.சந்திர சேகர் பேசும்போது, “மாணவர்களிடம் சாதி சாயம் பூசக்கூடது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சமூகத்திற்கு பயன்தரும் விதமான படங்களை எடுப்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நமது வாழ்க்கையில் பிராக்டிகலாக என்ன செய்திருக்கிறோம்..? என் மகன் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் மதம், சாதி என்கிற இடத்தில் தமிழன் என்று குறிப்பிட்டேன்.. முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.. பள்ளியையே மூடும் அளவுக்கு போராட்டம் நடத்துவேன் என கூறியதும், பின் அமைதியாக ஒப்புக்கொண்டனர். அப்போதிருந்து விஜய்யின் சான்றிதழில் சாதி என்கிற இடத்தில் தமிழன் என்றுதான் தொடர்ந்து வருகிறது.. சாதிக்கு நாம் தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.. நாம் நினைத்தால், இதுபோல பள்ளியில் சேர்க்கும்போதே சாதியை குறிப்பிடாமல் தவிர்த்தால் இன்னும் இருபது வருடங்களில் சாதி என்கிற ஒன்றே இல்லாமல் போய்விடும்.

எனது படத்தில் நடித்த அபிசரவணன் தற்போது விஜய் விஷ்வா என பெயரை மாற்றிக்கொண்டுள்ளார்.. விஜய் என்று சொன்னாலே ஒரு அதிர்வு ஏற்படும்.. பாலிவுட் கதாசிரியர் தான் சலீம் ஜாவேத் தனது கதையின் ஹீரோக்களுக்கு குறிப்பாக அமிதாப்பின் படங்களில் எப்போதுமே விஜய் என்றுதான் ஹீரோவுக்கு பெயர் வைப்பார்.. அதேபோல நானும் எனது படங்களின் நாயகர்களுக்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பேன். அதனால் தான் எனது மகனுக்கும் விஜய் என பெயர் வைத்தேன். விஜய் என்றாலே வெற்றி என்றுதான் அர்த்தம் அந்த வெற்றி இவரோடு ஒட்டிக்கொள்ள வேண்டும்.. என பேசினார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.