SAC About Joined in BJP

இப்படி சம்பாதிக்க அந்தத் தொழில் செஞ்சிட்டு போய்விடலாம் என பாஜகவில் இணைவதாக பார்வையை தகவலுக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார் நடிகரும் இயக்குனருமான சந்திரசேகர்.

SAC About Joined in BJP : தமிழ் சினிமாவை சார்ந்த பிரபலங்கள் பலர் சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியம் ஆகி வருகின்றனர். கடந்த வாரத்தில் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

இவரைத் தொடர்ந்து மேலும் பல நடிகர், நடிகைகள் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் SAC என்ற பெயரில் போலி கணக்கில் ஒன்றில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது.

தளபதி விஜயின் தந்தையான இவர் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல் விஜய் ரசிகர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது அது என்னுடைய கணக்கு அல்ல என் பெயரில் இயங்கும் போலி கணக்கு. அந்த பதிவுகளுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார்.

பாஜகவில் இணைய இருப்பதாக பரவிய தகவல் முழுக்க முழுக்க வதந்தி என தெரிவித்துள்ளார். மேலும் இப்படி காசு சம்பாதிக்க வேற தொழில் செஞ்சுட்டு போய்விடலாம் என பச்சையாக பேசியுள்ளார்.

அவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.