Yogi Babu Marriage
யோகி பாபுவுக்கு திருமணம் என பரவிய புகைப்படத்திற்கு புகைப்படத்தில் இருந்த பிரபலம் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. சமீபத்தில் யோகி பாபுவிற்கு திருமணம் எனவும் பெண் இவர் தான் எனவும் புகைப்படம் ஒன்று பரவியது. அந்த புகைப்படத்தில் இருந்தவர் நடிகை சபிதா ராய் என்பவர் தான்.

மேலும் இது முற்றிலும் பொய்யான விசியம் என யோகி பாபு ட்விட்டரில் விளக்கம் கொடுத்திருந்த நிலையில் சபிதா ராய் அவர்களும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் நீங்க எல்லாரும் தேடிட்டு இருந்த அந்த பொண்ணு நான் தான். அது கன்னி ராசி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து கொண்ட புகைப்படம். எனக்கு யோகி பாபுவை நல்ல நண்பராக காமெடியனாக பிடிக்கும். அவ்வளவு தான்.

எங்களுக்கு திருமணம் என்று பரவும் தகவல் உண்மையில்லை. தயவு செய்து யாரும் நம்பாதீர்கள் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.