
SabariMalai Issue : சபரிமலை விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய, நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு இதுவரை 529 வழக்குகள் போடப்பட்டுள்ளன, மேலும் 3505 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கார்த்திகை மாதம் மண்டல பூஜைக்காக வரும் நவம்பர் 16-ம் தேதி , ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது.
சபரிமலை கோவில் தீர்ப்புக்கு எதிரான மறுசீராய்வு மனுவின் விசாரணை வரும் ஜனவரி மாதம் 22- ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதன் காரணமாக சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட உள்ளதால், சபரிமலை அய்யப்பன் கோவில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அனைத்துக்கட்சி கூட்டத்தை சேர்ந்த, அனைத்து கட்சியினரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்