Sabarimala Women's Entry Issue
Sabarimala Women's Entry Issue

Sabarimala Women’s Entry Issue – திருவனந்தபுரம் : சபரிமலையில், பாதுகாப்பு பிரச்சனை கருதி சபரிமலைக்கு பெண்கள் வரவேண்டாம் என தேவஸம் போர்டு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதற்கு கேரளாவில் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

ஆனாலும், பெண்கள் சிலர் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். இருப்பினும், பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் உள்ளே செல்ல முடியாமல் திரும்பி விட்டனர்.

இந்நிலையில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டது.

இந்நிலையில், சாமி தரிசனம் செய்ய கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்றனர். மேலும், அவர்களுக்கு கேரள அரசு உரிய போலீஸ் பாதுகாப்பும் வழங்கியது.

எனினும் பக்தர்களின் எதிர்பை அடுத்து அந்த பெண்கள் பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்டனர். தொடர்ந்து பக்தர்கள் போராட்டம் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவியதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளதால் டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படவுள்ளது.

எனவே மகரவிளக்கு பூஜைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், சபரிமலை கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்க அதிகமாக இருக்கும் என்பதால் இளம் பெண்களின் பாதுகாப்பில் சிரமம் ஏற்படும் என திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் ஏ.பத்மகுமார் கூறியுள்ளார்.

மேலும், ‘பாதுகாப்பு பிரச்சனை காரணமாக பெண்கள் வர வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதால் விபரீத விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் ஏற்படும் என்றும் எனவே பெண்கள் வரவேண்டாம் ‘ என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.