Sabarimala Temple Issue
Sabarimala Temple Issue

Sabarimala Temple Issue – கேரளா: அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினர், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்றளவும் கேரளாவில், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ‘சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது’ .

“கேரள உயர்நீதிமன்றத்தில் உள்ள சபரிமலை பற்றிய வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது” .

அதாவது சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் தொடர்பான வழக்குகள் கேரள உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பல்வேறு தரப்பினர் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

இதன் காரணமாக, சபரிமலை பகுதியில் மற்றும் சபரிமலைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் போலீசார் கெடுபிடி அதிகமாக உள்ளது.

எனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்த வழக்குகள் அனைத்தும் வரும் ஜனவரி மாதம் விசாரணை செய்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றத்திலும் சபரிமலை விவகாரம் தொடர்பாக 23 வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகளும் கேரள உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் சபரிமலை வழக்கு பலரால் உச்சநீதிமன்றத்திலும், கேரள உயர்நீதிமன்றத்திலும் தொடரப்பட்டிருக்கிறது. ஒரே மாதிரியான வழக்குகள் என்பதால் இரு வேறு நீதிமன்றங்களில் இருப்பது என்பது இந்த வழக்கின் போக்கு மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

எனவே இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, “உச்சநீதிமனறத்தில் ஏற்கனவே சபரிமலை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

எனவே கேரள நீதிமன்றத்தில் இருக்கின்ற 23 வழக்குகளையும் உச்சநீதி மன்றத்தில் மாற்றி உச்சநீதிமன்றமே இந்த அனைத்து வழக்குகளையும் விசாரிக்க வேண்டும் என்று கேரள அரசு தனது அந்த மனுவில் தெரிவித்துள்ளது”.