Sabarimala temple Issue
Sabarimala temple Issue

Sabarimala temple Issue – டெல்லி: சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் நாங்கள் அதை ஆதரிப்பதாக திருவாங்கூர் தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இவ்வளவு நாட்கள் பெண்கள் நுழைவை எதிர்த்து வந்த திருவாங்கூர் தேவசம் போர்டு தற்போது பெண்கள் செல்வதை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.

சபரிமலை தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக இதுவரை மொத்தம் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களில் தேவசம் போர்ட்டின் மனுவும் ஒன்றாகும்.

இந்நிலையில் இன்று விசாரணையில் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பாக வழக்கறிஞர் ராகேஷ் திவேதி ஆஜரானார்.திவேதி தனது வாதத்தில், ‘சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதில் தவறு கிடையாது.

சபரிமலையில் பெண்கள் நுழைவிற்கு எதிராக பழக்க வழக்கங்கள் இருந்ததாக வரலாற்று ஆவணங்கள் எதிலும் ஆதாரமும் இல்லை.

அதனால் அதை கடைபிடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் பெண்கள் நுழைவை ஆதரிக்கிறோம்’ என்று கூறினா்; இதை கேட்டு கொண்டிருந்த, சபரிமலையில் பெண்கள் நுழைவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கிய ஒரே நீதிபதியான இந்து மல்ஹோத்ரா பெரும் அதிர்ச்சி அடைந்தார்!

தொடர்ந்து பேசிய திவேதி, ‘பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். பெண்கள் நுழைவை எதிர்ப்பது சம உரிமைக்கு எதிரானது.

சம உரிமைதான் அரசியலமைப்பின் முக்கிய நோக்கமே. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்’ என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here