Sabarimala Issue Kerala shutdown begins
Sabarimala Issue Kerala shutdown begins

Sabarimala Issue Kerala shutdown begins – திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன்பு ஐயப்ப பக்தர் தீக்குளித்த சம்பவத்தை கண்டித்து கேரளாவில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது, அதில் இருந்து கேரளாவில் நாள்தோறும் பதற்றம் நிலவியது.

அந்த தீர்ப்பை எதிர்த்து சபரிமலை பக்தர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ‘சபரிமலையில் 144 தடை உத்தரவு மற்றும் போலீஸ் கெடுபிடிகளை நீக்கக்கோரி பாஜ சார்பில் திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது’ .

கடந்த 3ம் தேதி பாஜக பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.அப்போது, அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து அவருக்கு பதிலாக பாஜ தலைவர் பத்மநாபன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். உண்ணாவிரத பந்தலில் அவருடன் பாஜவை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட தொண்டர்களும் உள்ளனர்.

இந்நிலையில் “உண்ணாவிரத பந்தலின் நேர் எதிரே உள்ள கட்டிடம் முன் ஒருவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைக்க முயன்றார்.

அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்துவதற்கு முன் அந்த நபர் தனது உடலில் தீவைத்துக் கொண்டார்..!? போலீசார் மற்றும் பாஜ தொண்டர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில் அவர் திருவனந்தபுரம் முட்டடை பகுதியை சேர்ந்த வேணுகோபாலன் நாயர்(49) என தெரியவந்தது.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்” . இதற்கிடையே, ஐயப்ப பக்தர் தீக்குளித்து தற்கொலை செய்ததை தொடர்ந்து இன்று கேரளாவில் பாஜக பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, ‘கன்னியாகுமரியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் கேரளாவில் பதற்றம் நிலவி வருகிறது’.