
Sabari Mala Cause : சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மறுசீராய்வு மனு அளித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றம் விசாரணை செய்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின் , இரண்டு முறை கோவில் நடை திறக்கப்பட்டது. இருப்பினும் , கோவிலுக்குள் எந்த ஒரு பெண்ணும் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
சபரிமலையே போராட்டக்களமாக இருந்தது . 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலை செல்லலாம் என்று தீர்ப்பு அளித்து இருந்தும் , எந்த ஒரு பெண்ணும் உள்ளே நுழைய முடியவில்லை.
பெண்கள் நுழைவதற்கு எதிராக கோவிலை சுற்றிலும் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் பதட்டமான சூழல் அங்கு நிலவியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, கேரளா பிராமணர்கள் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பாக இதுவரை 19 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் , மறு சீராய்வு செய்யக் கோரி அளித்த மனுவின் மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
தலைமை நீதிபதி சஞ்சய் கோகாய் கோகாய் தலைமையில் , மறுசீராய்வு மனு விசாரணை இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.