சந்தானத்தின் நடிப்பில் வெளியாகியுள்ள சபாபதி திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Sabapathy Movie Review : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வந்து தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் சபாபதி. இந்த படத்தை ஸ்ரீனிவாச ராவ் என்பவர் இயக்க சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். சந்தானத்துடன் எம்எஸ் பாஸ்கர், விஜய் டிவி புகழ் என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் கதைக்களம் :

பிறப்பிலிருந்தே பேச்சு சரியாக வராமல் திக்கி திக்கி பேசி வருபவர் சந்தானம் ( சபாபதி ). இவருக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வருபவர் சாவித்திரி. சந்தானத்தின் அப்பா அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற தன்னுடைய மகனை வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரை தொடர்ந்து பல நேர்காணலுக்கு அனுப்ப அங்கே சந்தானத்திற்கு வெறும் அவமானங்கள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் கடுப்பான சந்தானம் ஒருநாள் வீட்டிற்கு குடித்து விட்டு வந்தபோது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். இதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதைக்களம்.

இன்றைய ராசி பலன்.! (19.11.2021 : வெள்ளிக் கிழமை)

சக்ஸஸ் ஆகுமா சந்தானத்தின் புதிய படம்?? சபாபதி படத்தின் முழு விமர்சனம்.!!

படத்தை பற்றிய அலசல் :

வழக்கம் போல சந்தானம் இந்த படத்தில் தன்னுடைய கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி இதோடு இல்லாமல் அதோடு சேர்த்து உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார்.

சந்தானத்திற்கு அடுத்ததாக எம்எஸ் பாஸ்கர் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரும் நடிப்பில் வழக்கம் போல தூள் கிளப்பியுள்ளார்.

அறிமுக நடிகையாக அறிமுகமாகி உள்ள ப்ரீத்தி ஷர்மா அவருக்கான வேலையை ‌‌கச்சிதமாக செய்துள்ளார்.

படத்தில் சந்தானத்துடன் புகழ் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் புகழின் காமெடி எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான். ஒரு சில காட்சிகளில் மட்டுமே புகழ் நடித்துள்ளார்.

படம் வேற மாதிரி இருக்கு – Sabhaapathy Public Review

படத்துக்கு இசையமைத்துள்ள சாம் சி எஸ் பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை என்றாலும் பின்னணி இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

இயக்குனர் படத்தில் கதையை சூப்பராக தேர்வு செய்து அதனை முடிந்த அளவிற்கு நல்லபடி இயக்கியுள்ளார். ஆனால் படத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.