Saamai Kaara Puttu : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Saamai Kaara Puttu :

தேவையான பொருட்கள்:

சாமை அரிசி மாவு – ஒரு கப்,
உப்பு – தேவையான அளவு, வெங்காயம் – 1,
தக்காளி – 1,
பச்சை மிளகாய் – 2,
கடுகு – சிறிதளவு,
உளுத்தம்பருப்பு – சிறிதளவு,
கடலை பருப்பு – சிறிதளவு, வேர்க்கடலை – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு,
மஞ்சள்தூள் – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு, தேங்காய் துருவல் – தேவையான அளவு.

செய்முறை:

1) சாமை அரிசி மாவை வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெஜிடபிள் பருப்புக் கஞ்சி – சமைக்கலாம் வாங்க!

2) வெதுவெதுப்பான நீரில், உப்பு ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மாவில் தெளித்து புட்டு மாவு தயார் செய்ய வேண்டும்.

3) பிறகு அதை ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

4) கட்டியில்லாமல் உதிர்த்து கொள்ளுங்கள்.

5) வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

6) பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

7) வதங்கியதும் இதனுடன் வேக வைத்த புட்டு சேர்த்துக் கிளறவும். நன்றாக கலந்ததும் கொத்தமல்லி, தேங்காய் துருவல் தூவி பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here