சாஹோ படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க. சுஜித் குமார் இயக்கத்தில் பிரபாஸ், அருண் விஜய், ஷ்ரத்தா கபூர் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சாஹோ.

Saaho Movie Review :

படத்தின் கதைக்களம் :

பிரபாஸ் தன்னுடைய அப்பாவை கொன்ற கும்பலை ஒழித்து கட்ட முடிவு செய்து களமிறங்குகிறார்.

தன்னை போலீஸ் என கூறி போலீஸ் கூட்டத்தையே ஏமாற்றி ஒரு முக்கியமான பொருளை திருடி விடுகிறார். அதன் பின்னர் தான் இவர் போலீஸ் இல்லை திருடன் என தெரிய வருகிறது.

அதன் பின்னர் போலீஸ் திருடனான பிரபாஸை பிடிக்க முயல்கின்றனர். ஆனால் இறுதியில் இவர் திருடனும் இல்லை என்பது தெரிய வருகிறது.

உண்மையில் பிரபாஸ் யார்? இவரின் அப்பா யார்? ஏன் அவரை கொன்றார்கள்? என்பது தான் முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த இந்த திரைப்படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். அவருடைய நடிப்பு, ஆக்ஷன், ரொமான்ஸ் என அனைத்திலும் கலக்கியுள்ளார்.

ஷ்ரத்தா கபூர் :

ஷ்ரத்தா கபூரின் துணிச்சலான நடிப்பு சூப்பர், பிரபாஸுடன் சேர்ந்து திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அருண் விஜய் :

அருண் விஜய் வழக்கம் போல ஒரு ஸ்டைலிஸான நடிப்பை கொடுத்துள்ளார்.

தொழிநுட்பம் :

இசை :

கிட்டத்தட்ட 4 இசையமைப்பாளர்கள் பாடல்களுக்கு இசையமைக்க ஜிப்ரான் பின்னணி இசையை கொடுத்துள்ளார். பின்னணி இசை சூப்பர், காதல் சைக்கோ பாடல் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு :

ஆர். மதியின் ஒளிப்பதிவு நம்மை கிட்டத்தட்ட வேறொரு உலகத்திற்கு கொண்டு சென்று சென்று விடுகிறது.

எடிட்டிங் :

எடிட்டிங்கில் ஸ்ரீகர் பிரசாந்த் இன்னும் கொஞ்சம் தேவையில்லா காட்சிகளில் கத்தரி போட்டு படத்தின் நேரத்தை குறைத்திருக்கலாம்.

இயக்கம் :

சுஜித் குமாரின் கதை, திரைக்கதை அமைத்துள்ளார். தமிழிற்கு மட்டும் KGR அசோக் வசனம் எழுதியுள்ளார். முழுக்க முழுக்க சண்டை காட்சிகளுடம் கொண்டு சென்றுள்ளார். கிராபிக்ஸில் கொஞ்சம் கோட்டை விட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். தெலுங்கு ரசிகர்களை சுஜித் குமார் திருப்திப்படுத்தி விட்டார். ஆனால் தமிழ் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்த முடியவில்லை.

தம்ப்ஸ் அப் :

1. பிரபாஸின் நடிப்பு
2. ஷ்ரத்தா கபூரின் நடிப்பு
3. அருண் விஜய் நடிப்பு
4. சண்டை காட்சிகள்
5. BGM மியூசிக்

தம்ப்ஸ் டவுன் :

1. பல லாஜிக்கல் தவறுகள்
2. கற்பனைக்கு கூட சாத்தியமே இல்லாத சில காட்சிகள்
3. படத்தின் நீளம்